நாடாளுமன்றத்தில் அமளி: திமுக எம்பி கனிமொழி உட்பட 15 எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தியதற்காக ஒரு மாநிலங்களவை எம்பி மற்றும் 14 மக்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் இன்று மதியம் இடைநீக்கம் செய்யப்பட்ட 5 காங்கிரஸ் எம்பிக்களும் அடங்குவர்.
அவர்களை தவிர, கனிமொழி, மாணிக்கம் தாகூர், பி.ஆர்.நட்ராஜன், வி.கே.ஸ்ரீகாந்தம், பெனி பஹான், கே.சுப்ரமணியம், எஸ்.ஆர்.பிரதிபன், எஸ்.வெங்கடேசன், முகமது ஜாவேத் ஆகியோரும் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில், ஒன்பது பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும், இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் , 1 கம்யூனிஸ்ட் எம்பியும், 2 திமுக எம்பிக்களும், 2 மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்களும் உள்ளனர்.
டக்காலஜிஸ்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலால் ஏற்பட்ட அமளி
இன்று மதியம், இதற்கு முன்னதாக, குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நேற்று பலத்த பாதுகாப்பு மத்தியில், மக்களவைக்குள் திடீரென்று நுழைந்த இருவர், புகை குண்டுகளை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று கோரினர்.
ஆனால், அதற்கு சபாநாயகர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
இதனையடுத்து, இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்தனர்.
அப்போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் விதிகளை மீறியதாக கூறிய அவைத் தலைவர்கள் 15 எம்பிக்களை இடைநீக்கம் செய்துள்ளனர்.