நாடாளுமன்ற அத்துமீறல் பிரச்சனை: ஜோதிமணி உட்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில், ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டீன் குரியகோஸ், ஹைபி ஈடன், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன் ஆகிய காங்கிரஸ் எம்.பி.க்கள் ஐவரும் குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ'பிரைன் இன்று ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பலத்த பாதுகாப்பு மத்தியில், மக்களவைக்குள் திடீரென்று நுழைந்த இருவர், புகை குண்டுகளை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று கோரினர்.
டவ்ஜ்நா
'அரசியல் சார்பற்ற அணுகுமுறை தேவை': பிரகலாத் ஜோஷி
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முனைவைத்து இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு மீறல் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்படுவதற்கு முன் சபையில் உரையாற்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்துவதற்கு அரசியல் சார்பற்ற அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்திய ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து "கட்டுப்பாடற்ற நடத்தை"க்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.