NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நாளை திறப்பு - முதல்வர் திறந்து வைக்கிறார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நாளை திறப்பு - முதல்வர் திறந்து வைக்கிறார் 
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நாளை திறப்பு - முதல்வர் திறந்து வைக்கிறார்

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நாளை திறப்பு - முதல்வர் திறந்து வைக்கிறார் 

    எழுதியவர் Nivetha P
    Dec 29, 2023
    04:58 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும்,

    தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களின் வசதிகளை கருத்தில் கொண்டும் வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது.

    ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பில் 88.52 ஏக்கரில் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன தொழில்நுட்பம் கொண்டு இந்த கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த பேருந்து நிலையத்திற்குள் தனி காவல் நிலையம், பூங்கா உள்ளிட்டவைகளும் இடம்பெற்றுள்ளது.

    திறப்பு விழா 

    மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பேருந்து நிலையம் 

    இதன் கட்டுமான பணிகள் முன்னதாகவே நிறைவடைந்த நிலையில், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல ஏதுவாக வழிபாதைகள் அமைக்கும் பணி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை நடந்து வந்தது.

    அந்த பணிகளும் தற்போது நிறைவடைந்ததாக கூறப்படும் நிலையில், நாளை(டிச.,30) கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்கவுள்ளார் என்பதால் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், பேருந்து நிலையம் முழுவதும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

    இந்த திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு கடந்த 26ம் தேதி போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    சென்னை
    கோயம்பேடு
    சேகர் பாபு

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    மு.க ஸ்டாலின்

    பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை வானிலை அறிக்கை
    தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும்  புயல் எச்சரிக்கை
    மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு சென்னை
    சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை

    சென்னை

    "இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் விஜய்
    மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி உதயநிதி ஸ்டாலின்
    ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பிய காரணம் என்ன?-ஊர்மக்கள் கோரிக்கை என்ன? வெள்ளம்
    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர்  திருச்செந்தூர்

    கோயம்பேடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை  தமிழக அரசு
    தீபாவளிக்கு மறுநாள், நவ.,13ஆம் தேதி, கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது  தீபாவளி 2023
    வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை தமிழ்நாடு
    மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம் சென்னை

    சேகர் பாபு

    சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி தமிழ்நாடு
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு  தமிழ்நாடு
    331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025