Loading...
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் இடம்: இந்தியாவிற்கு 4 மத்திய ஐரோப்பிய நாடுகளின் கூட்டு ஆதரவு
ஐரோப்பாவை சேர்ந்த 4 முக்கிய நாடுகள் இந்தியாவிற்கு தங்களது கூட்டு ஆதரவை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளன

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் இடம்: இந்தியாவிற்கு 4 மத்திய ஐரோப்பிய நாடுகளின் கூட்டு ஆதரவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 22, 2026
09:58 am

செய்தி முன்னோட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) இந்தியா நிரந்தர உறுப்பினர் இடத்தை கோரி வரும் நிலையில், மத்திய ஐரோப்பாவை சேர்ந்த 4 முக்கிய நாடுகள் இந்தியாவிற்கு தங்களது கூட்டு ஆதரவை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளன. நியூயார்க்கில் நடைபெற்று வரும் 81-வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின் இடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் விசெக்ராட் குழுவின் (Visegrad Group - V4) நாடுகளான ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே முதல் கூட்டம் நடைபெற்றது.

ஆதரவு

V4 அமைப்பின் ஆதரவு

கூட்டத்திற்குப் பின் பேசிய ஸ்லோவாக்கிய வெளியுறவு அமைச்சர் சுராஜ் பிளனார், "இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் வல்லரசாகவும், குளோபல் சவுத் அமைப்பின் முதன்மை சக்தியாகவும் திகழும் இந்தியா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்பதில் V4 நாடுகள் அனைத்தும் ஒருமித்து உடன்படுகின்றன" எனத் தெரிவித்தார்.

ஜி4 அமைப்பின் (இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான்) ஒரு பகுதியாக, பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 25 அல்லது 26 ஆக உயர்த்த வேண்டும் என இந்தியா முன்மொழிந்துள்ளது.

இதில் புதிய நிரந்தர உறுப்பினர்களுக்கும் 'வீட்டோ' அதிகாரம் உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

வீட்டோ

வல்லரசுகளின் நிலைப்பாடு மற்றும் 'வீட்டோ' சவால்

தற்போதுள்ள நிரந்தர உறுப்பு நாடுகளான (P5) பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய 4 நாடுகள் இந்தியாவின் கோரிக்கைக்குக் கொள்கை அளவில் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால், சீனா மட்டும் தனது ராஜதந்திர நகர்வுகள் மூலம் மறைமுகத் தடைகளை ஏற்படுத்தி வருகிறது. ஐ.நா சாசனத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதிலும், புதிய உறுப்பினர்களுக்கான வீட்டோ அதிகாரத்தை நிர்ணயிப்பதிலும் வல்லரசுகளிடையே இன்னமும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

ADVERTISEMENT

வெளியுறவு அமைச்சர்

V4 நாடுகளுடன் புதிய ராஜதந்திர உறவு

இக்கூட்டம் குறித்துப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இதனை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடக்கம் என வர்ணித்தார்.

பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் மட்டுமின்றி, இந்தியா-V4 நாடுகளுக்கு இடையே ஆண்டுதோறும் வர்த்தக மாநாடு நடத்துவது, தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் இணைப்புத் துறைகளில் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

V4 நாடுகளின் இந்த ஆதரவு, ஐ.நா சீர்திருத்தத்தை உடனடியாக சாத்தியமாக்காவிட்டாலும், சர்வதேச அளவில் இந்தியாவின் கோரிக்கைக்கு மேலும் ஒரு வலுவான தூணாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT