Page Loader
ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு

ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 24, 2025
04:33 pm

செய்தி முன்னோட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைத்தது. ஏப்ரல் 27க்குள் அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதோடு பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு எடுத்த முடிவுகளின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து செல்லுபடியாகும் விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படுகின்றன. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

எதிர்வினை

இந்தியாவின் ராஜதந்திர எதிர்வினை

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக இந்திய அரசு நேற்று 5 ராஜதந்திர எதிர்வினை நடவடிக்கைகளை உடனடியாக அமல் படுத்தியது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம், ஸ்தானிகரணயங்கள் மூடல், உயர் அதிகாரிகளை திரும்ப பெறுதல், வாகா எல்லை மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கும்படி ஆலோசனை செய்யவிருப்பதாக செய்தி வெளியானது. இதற்காக உயர்மட்ட குழு கூடும் முன்னரே, அரபி கடலில் இந்தியாவின் INS விக்ராந்த் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு, பாகிஸ்தான் மற்றும் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.