Loading...
ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல்: கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு
ஏர் இந்தியா விமான கழிவறையில் கடத்தல் மிரட்டல் கடிதம் கிட்டைத்துள்ளது.

ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல்: கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு

எழுதியவர் Vasuki
Nov 11, 2026
03:28 pm

செய்தி முன்னோட்டம்

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மும்பை நோக்கி புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தை கடத்தப்போவதாக விடுக்கப்பட்ட மிரட்டல் கடிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 93 பயணிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்கள் என 98 பேருடன் புறப்பட இருந்த நிலையில், விமானத்தின் கழிவறையில் இந்த மிரட்டல் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதால் விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.

பயணிகள் அவசரமாக வெளியேற்றம்

கழிவறையில் சிக்கிய மிரட்டல் கடிதம்

காலை 10:20 மணிக்கு மும்பைக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில், 11:10 மணிக்கு விமானம் நடுவானில் கடத்தப்படும் என்று எழுதப்பட்ட மர்மக் கடிதம் சிக்கியது.

அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக விமானி மற்றும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் அறைக்கு அவசரத் தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து விமான நிலைய இயக்குநர் தலைமையில் CISF படையினர், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து களமிறங்கினர்.

விமானத்தில் ஏறியிருந்த 93 பயணிகளும் உடனடியாகக் கீழே இறக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

கடிதத்தை எழுதிய மர்ம நபர் குறித்து பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT