Page Loader
17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Jan 07, 2024
04:32 pm

செய்தி முன்னோட்டம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 7 தென் தமிழகம் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக பகுதிகளிலும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி

தகவ்ல்ச்சா

ஜனவரி 8

தமிழகத்தின் அநேக பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஜனவரி 9 தென் தமிழகதின் ஒருசில பகுதிகளிலும், வடதமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஜனவரி 10தென் தமிழகதின் ஒருசில பகுதிகளிலும், வடதமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.