NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகமாவுள்ள 6 புதிய மசோதாக்கள் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகமாவுள்ள 6 புதிய மசோதாக்கள் என்ன?
    இதில் ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது

    நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகமாவுள்ள 6 புதிய மசோதாக்கள் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 19, 2024
    02:41 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் ஜூலை 22 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது.

    இதில் ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

    ஆகஸ்ட் 12 வரை நீளும் இந்த கூட்டத்தொடரில் ஆறு புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக உள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

    முக்கியமாக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    அதே போல் தற்போது நடைமுறையில் உள்ள விமானச் சட்டத்தை மாற்றும் பாரதிய வாயுயான் விதேயக் 2024 மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

    மசோதாக்கள்

    கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவுள்ள மசோதாக்கள் பட்டியல்

    பாரதிய வாயுயன் விதேயக் மசோதா

    பேரிடர் மேலாண்மை மசோதா

    நிதி மசோதா

    காபி மசோதா

    ரப்பர் மசோதா

    கொதிகலன்கள் மசோதா

    ஆகிய மசோதாக்கள் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக,நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிக்கும் 11 பேர் கொண்ட அலுவல் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார் சபாநாயகர் ஓம் பிர்லா.

    இந்த குழுவில் திமுக சார்பில் தயாநிதி மாறன், பாஜகவிலிருந்துபாஜகவிலிருந்து நிஷிகாந்த் துபே, அனுராக் சிங் தாக்கூர், பர்த்ருஹரி மஹ்தாப், பி.பி. சௌத்ரி, பைஜயந்த் பாண்டா, சஞ்சய் ஜெய்ஸ்வால் மற்றும் காங்கிரஸில் இருந்து கே.சுரேஷ், கௌரவ் கோகோய் ஆகியோரும் ஏனைய முக்கிய கட்சிகளிலிருந்து தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    நாடாளுமன்றம்

    தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றம் இந்தியா
    நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு நாடாளுமன்ற அத்துமீறல்
    எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார் ராகுல் காந்தி
    சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையினை மறுத்ததன் பின்னணி என்ன?-ஸ்மிருதி இரானி விளக்கம்  விடுமுறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025