
புயல்-வெள்ள பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட தென் மாவட்ட ரயில் சேவைகள்: முழு விபரம்!
செய்தி முன்னோட்டம்
சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெஞ்சல் புயலின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் விளைவாக, விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில் பழத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
அதே போல மற்ற இடங்களிலும் தொடர்ந்து வெள்ளநீர் பாதிப்பு காரணமாக, பயணிகளின் பாதுகாப்புக்காக 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரங்கள்
வைகை எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடி - சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ், மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில், சென்னை - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், விழுப்புரம் - தாம்பரம் ரயில், புதுச்சேரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட ரயில் சேவைகள்: விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையிலான பாலம் துண்டிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நீலகிரியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்றும் இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustIn | ரயில் பயணிகளின் கவனத்திற்கு..!
— Sun News (@sunnewstamil) December 2, 2024
🚂 மழை பாதிப்பு காரணமாக இன்று எழும்பூர் - திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் ரத்து!
🚂 விழுப்புரம் - தாம்பரம் செல்லும் ரயில் மற்றும் புதுச்சேரி எழும்பூர் இடையிலான ரயிலும் ரத்து செய்யப்பட்டது.
🚂 விக்கிரவாண்டி -…