LOADING...
சட்டமன்றத் தேர்தல் எக்ஸிட் போல்: மண்டல வாரியாக முழு விவரங்கள்!
மண்டல வாரியாக அக்னி நியூஸ் சர்வீஸ் எக்ஸிட் போல்

சட்டமன்றத் தேர்தல் எக்ஸிட் போல்: மண்டல வாரியாக முழு விவரங்கள்!

எழுதியவர் Vasuki
Apr 29, 2026
08:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில், கோயம்புத்தூரை சேர்ந்த 'அக்னி நியூஸ் சர்வீஸ்' நிறுவனம் தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது. இந்த எக்ஸிட் போல் முடிவுகளின்படி, தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மாபெரும் வெற்றியுடன் ஆட்சியை தக்கவைக்கும் எனத் தெரிகிறது.

மண்டல வாரியான முடிவுகளின் அலசல்

ஆட்சியமைக்கும் திமுக

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 169 இடங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் அரியணை ஏறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலை விட அதிக இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 64 இடங்களை மட்டுமே பெறும் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு சதவீத அடிப்படையில் பார்த்தால், திமுக மாநிலம் முழுவதும் சராசரியாக 43.1% வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

மேற்கு மண்டலத்தில் திமுக

தலைநகர் சென்னையில் திமுக

மண்டல வாரியான முடிவுகளைப் பார்க்கும்போது, திமுக அனைத்து மண்டலங்களிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது. குறிப்பாக, தென் மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில் 40 இடங்களையும், மத்திய மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் 33 இடங்களையும் திமுக கூட்டணி அள்ளியுள்ளது. அதிமுக-வின் கோட்டையாகக் கருதப்படும் மேற்கு மண்டலத்திலும் (50 தொகுதிகள்), திமுக 31 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. வடக்கு மண்டலத்தில் உள்ள 52 இடங்களில் 34 இடங்களை திமுக வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, 37 தொகுதிகளில் 31 இடங்களை திமுக கூட்டணி தன்வசப்படுத்தும் எனத் தெரிகிறது.

Advertisement

தவெகவின் ஓட்டு சதவீதம்

நாம் தமிழர் கட்சியின் நிலை

இந்தத் தேர்தலின் முக்கியக் கவனமான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), சென்னை மண்டலத்தில் ஒரு இடத்தைப் பிடித்து சட்டமன்றத்திற்குள் நுழையும் என அக்னி நியூஸ் சர்வீஸ் கணித்துள்ளது. வாக்கு சதவீதத்தில் தவெக 15.1% பெற்று மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாகச் சென்னையில் 18.4% வாக்குகளைப் பெற்று திமுக-விற்கு அடுத்தபடியாக ஒரு வலுவான போட்டியைத் தந்துள்ளதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி (NTK) மாநில அளவில் 4.1% வாக்குகளை பெற்றாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement