Page Loader
அதிமுக ஒன்றிணைவதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லை: OPS
எந்த நிபந்தனைகளும் எனக்கு இல்லை என்று OPS தெரிவித்துள்ளார்

அதிமுக ஒன்றிணைவதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லை: OPS

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2025
06:19 pm

செய்தி முன்னோட்டம்

அதிமுக ஒன்றிணைவதற்கு எந்த நிபந்தனைகளும் எனக்கு இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக அவர் கூறியதாவது,"பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்வது என்பது தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முறை. இந்தத் தேர்வு விதிகளை திருத்தவோ, ரத்துசெய்யவோ முடியாது". "எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டி அந்த விதிகளை மாற்றியுள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டிக்கு 10 மாவட்ட செயலாளர்களின் பரிந்துரையை அவசியமாக மாற்றியுள்ளார்." "எம்.ஜி.ஆர். காலத்திலேயே மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் செங்கோட்டையன். பல்வேறு விமர்சனங்களுக்கு அதிமுகவில் இருக்கும் செங்கோட்டையன்தான் பதில் கூற வேண்டும். கட்சி ஒன்றாக இயங்க வேண்டும் என்று விரும்புபவர் செங்கோட்டையன். கட்சி ஒன்றிணைய வேண்டும் என்றுதான் நானும், சசிகலா, டி.டி.வி. உள்பட அனைவரும் கூறி வருகிறோம்" என்றார்.

மனு தாக்கல்

கேவியட் மனு தாக்கல்

இதற்கிடையில், ஓ.பி.எஸ். தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடக்கூடும் என நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து, அ.தி.மு.க. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது என்ற அறிவிப்பு இடப்பட்டுள்ளது. அப்பீல் செய்யும்போது, தங்களது தரப்பையும் கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி, ஓ.பி.எஸ். தரப்பில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post