
வாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
தனியார் நிறுவனமான இந்த தொழிற்சாலையில் நேற்று(டிச.,26) நள்ளிரவு 12 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
இந்த பாதிப்புக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டுவர வசதியாக கடற்கரை பகுதியிலிருந்து தொழிற்சாலை வரை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கசிவு
குழாயில் கசிவு ஏற்பட்ட உறுதி செய்த மாசு கட்டுப்பாடு வாரியம்
இந்த குழாயில் கசிவு ஏற்பட்டதன் காரணமாகவே அப்பகுதி மக்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக ஆய்வு நடத்திய பின்னர் மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்தது.
மேலும், குழாயின் உடைப்புகளை சரிசெய்து தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே தொழிற்சாலையை இயக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த உரத்தொழிற்சாலையை தமிழக அரசு தற்காலிகமாக மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து வாயுக்கசிவு குறித்து ஆய்வு செய்து ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பாதிப்பு
தொழிற்சாலையை சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்
இதற்கிடையே, இன்று(டிச.,27) காற்றில் கலந்த ரசாயனத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்யவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தொழிற்சாலையில் ஏற்பட்ட வாசிகசிவால் பாதிப்பு ஏற்பட்டதை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியதோடு, தொழிற்சாலை வாசலில் காவலுக்கு நின்ற காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
காவல்துறை கொடுத்த விளக்கம்
Watch | சென்னையை அடுத்த எண்ணூர் தனியார் தொழிற்சாலையில் இருந்து, கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு. எண்ணூர் சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதி!
— Sun News (@sunnewstamil) December 27, 2023
பதற்றமடைந்த மக்களை அழைத்து அமைதிப்படுத்திய காவல்துறையினர்!… pic.twitter.com/1900iPG3li
ட்விட்டர் அஞ்சல்
தமிழக அரசு அதிரடி உத்தரவு
#BREAKING | எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு!#SunNews | #Ennore_GasLeak | #TamilNaduGovt pic.twitter.com/XifAX0Pkt3
— Sun News (@sunnewstamil) December 27, 2023