ஜாதி மற்றும் வகுப்புவாத அடிப்படையில் பிரச்சாரம் செய்த பாஜக, காங்கிரஸ்: தேர்தல் ஆணையம் கண்டனம்
இந்திய தேர்தல் ஆணையம்(ECI) இன்று பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் சாதி, சமூகம், மொழி மற்றும் வகுப்புவாத அடிப்படையில் பிரச்சாரம் செய்வதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட நட்சத்திர பிரச்சாரகர்கள் அவர்களது சொற்பொழிவை சரிசெய்ய வேண்டும் எண்டுறம், கவனமாக செயல்பட வேண்டும் என்றும், ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட தேர்தல் ஆணையம், இது குறித்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் கூறியுள்ளது.
மத மற்றும் வகுப்புவாத பேச்சுக்களை தவிர்க்குமாறு பாஜக, காங்கிரஸுக்கு அறிவுறுத்தல்
'இந்திய வாக்காளர்களின் தரமான தேர்தல் அனுபவத்தை பலவீனப்படுத்த இரண்டு பெரிய கட்சிகளையும் அனுமதிக்க முடியாது' என்று தலைமை தேர்தல் குழு கூறியுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தேர்தல் பிரச்சாரத்தின் போது மத மற்றும் வகுப்புவாத பேச்சுக்களை தவிர்க்குமாறு பாஜக மற்றும் அதன் பிரச்சாரகர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பாஜக கட்சி மக்களை 'பிளவுபடுத்தும்' வகையில் பிரச்சாரம் செய்வதாக பாஜக மீது காங்கிரஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர்களும் பிரிவினைவாத கருத்துக்களை பேசுவுதாக தெரிவித்துள்ளது.