பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி
செய்தி முன்னோட்டம்
மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கான அதிமுக'வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமானது இன்று(டிச.,26)சென்னை வானகரத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி கே பழனிசாமி, 'பாஜக கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம். இனி என்றும் பாஜக'வுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்பதை இங்கே மீண்டும் ஒருமுறை கூறி தெளிவுப்படுத்துகிறேன்' என்று கூறியுள்ளார்.
பாஜக'வுடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதில் இருந்து மு.க.ஸ்டாலின் தனது தூக்கத்தினை இழந்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், மத்திய அரசினை குறைக்கூறி ஆளுங்கட்சியாக திமுக தப்பிக்க நினைக்கிறது என்றும், தேசிய கட்சிகளை நம்பி இனி ஒரு பிரோயோஜனமும் இல்லை. மக்களின் குரல் நாடாளுமன்றம் வரை ஒலிக்க வேண்டும் என்பதே அதிமுக'வின் எண்ணம் என்றும் பேசியுள்ளார்.
கூட்டம்
மக்கள் நலன் கருதி தமிழகத்திற்கு தேவைப்படும் நிதியினை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரினார்
தொடர்ந்து பேசிய அவர், 'மத்தியில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சி ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் பார்க்கிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இப்பொதுக்குழு கூட்டத்தில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகையினை ஏற்றி வழங்குவது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர் உடனடியாக சென்று ஆய்வு செய்திருந்தால் அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டிருப்பர் என்றுக்கூறிய எடப்பாடி பழனிச்சாமி,
நிதியில்லை என்று கூறும் திமுக அரசு, அதனை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 'தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுத்ததாக சரித்திரம் இல்லை. மக்கள் நலன் கருதி தமிழகத்திற்கு தேவைப்படும் நிதியினை மத்திய அரசு வழங்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.