'சென்னையில் வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறியது' - தமிழக முதல்வர் பெருமிதம்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஓர் பதிவினை செய்துள்ளார்.
அதில் அவர், 'சென்னையில் மழை என்றவுடன் பதறும் காலம் மாறியது' என்றும்.
'தமிழ்நாடு மாநிலத்தில் திமுக பொறுப்பேற்றவுடன் மேற்கொண்ட பணிகள் தான் இந்த நிலைக்கு காரணம்' என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
876கி.மீ.,தூரத்திற்கு புதிதாக வடிகால்கள் அமைத்தல், மழை நீர் தேங்காதவாறு தூர்வாருதல், உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மக்களை கனமழை பாதிப்பில் இருந்து பாதுகாத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரும் காலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர்
கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் அதிகளவு மழை பதிவு
இந்நிலையில், பெருநகர மாநகராட்சி அலுவலர்கள், அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் என அனைவரும் மக்களுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து, இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு ஓர் சின்ன இன்னல் கூட ஏற்படாமல் பார்த்துக்கொள்ள திராவிட மாடல் அரசு இருக்கிறது என்னும் நம்பிக்கையினை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என்றும் அவர் மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
அதிகபட்சமாக காலை 9 மணி முதல் 10 மணிவரை கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 7 செ.மீ.,மழை பதிவாகியுள்ளது.