
காலக்கெடுவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு என்ன நடக்கும்?
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியா பல கடுமையான ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தது.
அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விசா ரத்து செய்யப்பட்டது.
சார்க் விசா வைத்திருப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான கடைசி தேதி நேற்று ஏப்ரல் 27 உடன் முடிவடைந்தது.
குறுகிய கால விசாக்கள் வைத்திருக்கும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு தற்போது முடிந்துவிட்டது.
அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறி காலாவதியான விசாக்களுடன் இங்கே தங்கியிருந்தால் கைது, வழக்குத் தொடருதல், அபராதம் அல்லது சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
மேலும் குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025 இன் படி, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக ₹ 3 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
நடவடிக்கை
கூட்டம் கூட்டமாக இந்தியாவை விட்டு வெளியேறிய பாகிஸ்தானியர்கள்
SVES விசாவின் கீழ் தற்போது மருத்துவ விசா வைத்திருப்பவர்களுக்கு இந்தியாவை விட்டு வெளியேற கடைசி தேதி ஏப்ரல் 29 ஆகும்
இந்திய சட்டத்தின்படி, மீறுபவர்கள் "விசா வழங்கப்பட்ட காலத்திற்கு மேல் இந்தியாவின் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பிற பயண ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பவர்கள்" என்று வரையறுக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள்.
மத்திய அரசின் எச்சரிக்கைக்குப் பிறகு 500க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.
குறுகிய கால விசா வைத்திருப்பவர்களுக்கான காலக்கெடு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்ததை அடுத்து, கடந்த மூன்று நாட்களில் மொத்தம் 537 பாகிஸ்தானியர்கள் அட்டாரி எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேபோல கடந்த மூன்று நாட்களில் 850 இந்தியர்கள் இந்தியா திரும்பியுள்ளனர்.