தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை
செய்தி முன்னோட்டம்
கேரளா மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
நேற்று(டிச.,20)ஒரே நாளில் மட்டும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுவரை 92 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிகிறது.
மாவட்ட வாரியாக பார்த்தால், சென்னையில் 29 பேர், கோவையில் 13 பேர், திருவாரூர் மாவட்டத்தில் 13 பேர், செங்கல்பட்டில் 8 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நேற்றைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
இதே போல், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பூர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொற்று ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
கொரோனா
கர்ப்பிணி பெண்கள், வயதானோர் முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தல்
இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள், வயதானோர் முகக்கவசம் அணியவேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தற்போது பரவும் புதிய வகை கொரோனா பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டாலும், தனிமனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனாவின் பொதுவான விதிமுறைகளை கடைபிடிப்பது சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே அண்டை மாநிலமான கர்நாடகா கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் ஒன்றுக்கூட தடை விதிக்கப்படவில்லை, மாநிலம் விட்டு மாநிலம் செல்லத்தடையில்லை என்றும் கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டூ ராவ் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளிக்காட்சி மூலம் அனைத்து மாநில அரசுகளுடன் கலந்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.