தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம்: முதல்வர் விஜய் இன்று வெளிநாடு பயணம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் விஜய் இன்று ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தனது முதலாவது அரசுமுறை பயணத்தை மேற்கொள்கிறார். சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக லண்டன் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. துபாயில் இணைப்பு விமானத்தை பிடித்து பின் லண்டன் சென்று அடைவார். இப்பயணம் சுமார் ஒரு வாரம் வரை (செப்டம்பர் 16 வரை) திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லண்டன் பயணத்தின் போது, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முக்கியத் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து ஆலோசிக்கவுள்ளார்.
சந்திப்பு
நடிகர் அஜித்துடனான சந்திப்பு சாத்தியமா?
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழல்கள் குறித்தும், முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து, முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகவுள்ளன.
கார் பந்தய வீரரும் நடிகருமான அஜித் குமார், இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் சுற்றில் நடைபெறும் பந்தயத்தில் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில், இப் பயணத்தின் போது நடிகர் அஜித்தை முதலமைச்சர் விஜய் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முதல்வருடன் தொழில் துறை மற்றும் நிதித் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும் இப் பயணத்தில் உடன் செல்கின்றனர்.