Loading...
வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு சிறப்பு வட்டித் தள்ளுபடி: 6,496 பேர் பயன்பெறும் வகையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு சிறப்பு வட்டித் தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்

வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு சிறப்பு வட்டித் தள்ளுபடி: 6,496 பேர் பயன்பெறும் வகையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2026
02:57 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் (TNHB) தவணைமுறைத் திட்டத்தின் கீழ் மனை, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பெற்று, விற்பனைப் பத்திரம் பெறாமல் இருக்கும் ஒதுக்கீடுதாரர்களுக்கு சிறப்பு வட்டித் தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறுவார்கள் என முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுவசதி வாரியத்தில் தவணைக் காலம் முடிவுற்ற பின்பும் முழுத்தொகையையும் செலுத்த முடியாமல் சுமார் 6,496 பேர் விற்பனைப் பத்திரம் பெறாமல் உள்ளனர். அதிகப்படியான வட்டி சுமையே இதற்கு காரணம் என்பதால், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது வட்டித் தள்ளுபடி வழங்கப்படும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

உத்தரவுகள்

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள உத்தரவுகள்

வீட்டுவசதி வாரியத்தின் தவணை கொள்முதல் திட்டங்களில் மனை, வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று, 31.03.2026-க்குள் தவணைக் காலம் முடிவுற்று நிலுவைத்தொகை செலுத்தத் தவறியவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

நிலுவைத்தொகைக்கான வட்டித் தள்ளுபடியுடன், கூடுதலாக 5 மாதத்திற்குண்டான வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டு விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்.

இந்தச் சிறப்புத் திட்டம் ஓராண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இச்சிறப்பு வட்டி சலுகையின் மூலம் 6,496 ஒதுக்கீடுதாரர்களுக்கு மொத்தம் ரூ.18.45 கோடி வரை வட்டித் தள்ளுபடி கிடைக்கும்; இதன் மூலம் அவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த விற்பனைப் பத்திரத்தை எளிதில் பெற முடியும்.

நிலுவைத் தொகைகள் வசூலாவதன் மூலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சுமார் ரூ.92.39 கோடி வருவாய் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT