Loading...
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு: வரப்போகுது லைட் ஹவுஸ் முதல் அடையாறு வரை உயர்மட்ட பாலம்
DPR பணியை வெற்றிகரமாக முடிக்க 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு: வரப்போகுது லைட் ஹவுஸ் முதல் அடையாறு வரை உயர்மட்ட பாலம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 22, 2026
03:03 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையின் மிக முக்கிய கடற்கரை சாலையான கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. மெரினா கடற்கரை சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் வகையில், நெடுஞ்சாலைத்துறையின் சென்னை நகர சாலைகள் கோட்டம் சார்பில் இந்த புதிய உயர்மட்ட சாலை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.

விவரங்கள்

டெண்டர் விவரங்கள்

இந்த டிபிஆர் தயாரிப்புப் பணியின் மொத்த மதிப்பீடு ரூ.38 லட்சத்து 10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பணியை வெற்றிகரமாக முடிக்க 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க டெண்டர் கட்டணம் எதுவும் இல்லை என்றாலும், முன்வைப்புத் தொகையாக (EMD) ரூ.29,500 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு, தகுதியான ஒப்பந்ததாரர்கள் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

லைட் ஹவுஸ் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை அமைக்கப்படவுள்ள இந்த 4 கி.மீ. உயர்மட்ட மேம்பாலம் அப்பகுதி போக்குவரத்தை முற்றிலும் மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அடுத்த கட்ட கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT