Page Loader
கேம்பஸ் இன்டர்வியூவில் சென்னை ஐ.ஐ.டி. மாணவருக்கு அளிக்கப்பட்ட வரலாற்று சம்பளம்!
சென்னை ஐ.ஐ.டி. வரலாற்றில் அதிகபட்ச ஊதியமாகும்

கேம்பஸ் இன்டர்வியூவில் சென்னை ஐ.ஐ.டி. மாணவருக்கு அளிக்கப்பட்ட வரலாற்று சம்பளம்!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 05, 2024
05:04 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை ஐஐடி.யில் நடைபெற்ற பிளேஸ்மென்டில், ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.4.30 கோடி ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது. இது சென்னை ஐ.ஐ.டி. வரலாற்றில் அதிகபட்ச ஊதியமாகும். 2024-25ஆம் ஆண்டுக்கான பிளேஸ்மென்ட் செயல்முறை நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில்- டெல்லி, மும்பை, கோரக்பூர் மற்றும் கவுகாத்தி போன்றவற்றில் தொடங்கியுள்ளது. இந்த பிளேஸ்மென்ட்டில் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், கேபிடல் ஒன், குவாண்டம் பாக்ஸ் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, அதிக சம்பளங்களில் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சாதனை

வால் ஸ்ட்ரீட் டிரேடிங் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்ட சென்னை IIT மாணவர்

சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பிளேஸ்மென்டில், 4.30 கோடி சம்பளத்துடன் தேர்வு செய்யப்பட்ட மாணவர், அந்த கல்லூரியில் படிப்பை முடிக்குமுன் அதிகபட்ச சம்பளம் பெற்றவர் ஆகிறார். இந்த மாணவர், அமெரிக்காவில் உள்ள பிரபல வால் ஸ்ட்ரீட் டிரேடிங் நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் டிரேடிங் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த நிறுவனத்தின் ஹாங்காங் பிரிவில் பணியாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவின் மூலம், சாப்ட்வேர், வங்கி, பைனான்ஸ் மற்றும் பல துறைகளில் ஏராளமான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9 மாணவர்கள் வெளிநாட்டிலுள்ள பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.