
சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் திடீர் மாற்றம்; என்ன காரணம்?
செய்தி முன்னோட்டம்
இந்திய விமானப்படையின் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6 ஆம் தேதி பிரமாண்ட விமான சாகச நிகழ்வு நடைபெற உள்ளது.
இதன் காரணமாக சென்னை விமான நிலைய வான் தடம் 5 நாட்களுக்கு குறிப்பிட்ட நேர இடைவேளையில் மூடப்பட உள்ளது.
இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#தகவல்பலகை | வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதால் சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் மாற்றம்!#SunNews | #Chennai | #AirShow | #ChennaiAirport pic.twitter.com/mWm4KVvDQy
— Sun News (@sunnewstamil) October 1, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி காரணமாக விமான அட்டவணையில் மாற்றம் குறித்து சென்னை விமான நிலையம் பயணிகளுக்கு முன்னறிவிப்பு விடுத்துள்ளது.
— Chennai (MAA) Airport (@aaichnairport) September 30, 2024
சென்னை, செப்டம்பர் 30, 2024 - இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில்… pic.twitter.com/n8M8EL8bw8
சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலைய சேவை
விமானப்படை சாகச நிகழ்வுக்கான ஒத்திகை இன்று துவங்குகிறது. இதனால் சென்னை வான் தடம் ரெட் சோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திகை நிகழ்ச்சிகள் 5ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
அதன் பின்னர், அக்டோபர் 6-ஆம் தேதி, காலை 11 மணி முதல் 2 மணி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கான வான்வழி சாகச நிகழ்ச்சிகள் மற்றும் அக்டோபர் 8-ஆம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதனால், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகையில் பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணைக்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தில் மாற்றங்களை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.