23 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி! அனுமதி இலவசம்!
இந்திய விமானப்படை நிறுவப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு, அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான வான்சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழு உட்பட 72 வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். இந்நிகழ்ச்சியை காண அனைவரையும் வரவேற்று Defence PRO எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னையில் மீண்டும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 15 லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியை காண வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Twitter Post
Twitter Post
நிகழ்ச்சி நிரல் இதுதான்
1932ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி நிறுவப்பட்ட இந்திய விமானப்படை, வருடந்தோறும் அக்டோபர் 8-ல் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, 92-வது இந்திய விமானப்படை தினம் தேசிய அளவில் விமர்சையாக கொண்டாடப்படும். சென்னை மெரினா கடற்கரையில் "ஏர்ஷோ" எனப்படும் விமான சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6-இல் நடைபெறும். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் அக்டோபர் 2 முதல் 5ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. அக்டோபர் 6-ஆம் தேதி, காலை 11 மணி முதல் 2 மணி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கான வான்வழி சாகச நிகழ்ச்சிகள் மற்றும் அக்டோபர் 8-ஆம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என இந்திய விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.