NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை தொடர் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை தொடர் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
    கொள்ளையர்கள் இருவரில் ஒருவர், இன்று அதிகாலை போலீசாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார் pc: ஹிந்து தமிழ்

    சென்னை தொடர் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 26, 2025
    08:36 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் தொடர்ச்சியான செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கூறி நேற்று கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் இருவரில் ஒருவர், இன்று அதிகாலை போலீசாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

    சென்னையில் கடந்த (மார்ச் 25) திங்கட்கிழமை ஒரே நாளில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர், அடையாறு சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர், கிண்டி எம்ஆர்சி போன்ற பகுதிகளில் இந்த சம்பவங்கள் நடைபெற்றன.

    இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட சென்னை காவல்துறை சில மணிநேரத்திலேயே கொள்ளையர்களை விமான நிலையத்தில் தப்பி ஓடவிருந்த நேரத்தில் கைது செய்தனர்.

    அவர்கள் திருடிய நகைகளை மீட்க செல்லும்போது இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.

    கைது

    தனிபடை அமைத்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 

    திங்கள் காலை 6 மணி முதல் 7.10 மணிக்குள், ஒரு மணி நேரத்தில் மூதாட்டிகளை குறிவைத்து தொடர்ந்த பணப்பறிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியூட்டின.

    குற்றவாளிகளை பிடிக்க, காவல் ஆணையர் அருணின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை, சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்டது.

    இதனடிப்படையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 பேர் என தெரியவந்தது.

    அவர்கள் சென்னை விமான நிலையம் நோக்கி புறப்பட்டதை அறிந்த காவல்துறையினர், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன் பின்னர், ஐதராபாத் மற்றும் மும்பை விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

    அங்கே போலீசாரின் பரிசோதனையில் சந்தேகத்திற்கு இடமான இரண்டு கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டனர்.

    என்கவுண்டர் 

    உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என கண்டுபிடிப்பு

    இந்த இரு கொள்ளையர்களும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் தொடர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இந்த செயின் பறிப்பு சம்பவங்களின் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன் இன்று அதிகாலை போலீசாரின் என்கவுன்ட்டரில் சுடப்பட்டு உயிரிழந்தார்.

    கொள்ளையர்கள் தரமணி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள இடத்தில் நகைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் கூறினார்.

    பதுக்கி வைக்கப்பட்ட நகைகளை மீட்க ஜாபர் குலாம் ஹுசைனை போலீசார் அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது, அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்புவதற்காக முயற்சித்தார். அப்போது காவல்துறையினரால் அவர் சுட்டுகொல்லப்பட்டார்.

    ஜாபர் குலாம் ஹுசைன் மீது நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவானதாகவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கைது
    கொள்ளை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    சென்னை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    இந்திய ரயில்வே மின்மயமாக்கலின் நூற்றாண்டு கொண்டாட்டம்; முதல் மின்சார ரயில் எங்கே ஓடியது தெரியுமா? இந்திய ரயில்வே

    கைது

    சிபிஐ கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி அரவிந்த் கெஜ்ரிவால்
    கிருஷ்ணகிரி சம்பவத்தில் கைதாகி சிறையில் இருந்த முக்கிய குற்றவாளி சிவராமன் திடீர் உயிரிழப்பு பாலியல் வன்கொடுமை
    டெலிகிராம் செயலியின் நிறுவனர் பிரான்ஸ் நாட்டில் கைது; பின்னணி என்ன? டெலிகிராம்
    விடுதலையாவரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அரவிந்த் கெஜ்ரிவால்

    கொள்ளை

    சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை  சிங்கப்பூர்
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை பலாத்காரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025