Loading...
850 மக்களவை இடங்கள் & 15 ஆண்டுகளுக்கு மகளிர் இடஒதுக்கீடு: மத்திய அரசின் தொகுதி மறுவரையறைத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
850 மக்களவை இடங்கள் & 15 ஆண்டுகளுக்கு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய விவரங்கள்

850 மக்களவை இடங்கள் & 15 ஆண்டுகளுக்கு மகளிர் இடஒதுக்கீடு: மத்திய அரசின் தொகுதி மறுவரையறைத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 28, 2026
06:33 am

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% உயர்த்தி 33% மகளிர் இடஒதுக்கீட்டை 2029 தேர்தலிலேயே அமல்படுத்தும் வகையில் அரசியலமைப்பு 132-வது திருத்த மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்களை வரும் நவம்பர் 30 திங்கட்கிழமை (நவம்பர் 30) தொடங்கும் சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. இந்த புதிய சட்டத் தொகுப்பின் மூலம் மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 550-லிருந்து 850-ஆகவும் மாநில சட்டப்பேரவைகளின் அதிகபட்ச எண்ணிக்கை 500-லிருந்து 650-ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு காத்திருக்காமல் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்துவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு

மாநிலங்களின் விகிதாச்சாரத்தை பாதுகாக்க 1971 மற்றும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு

கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் போதிய பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்த நிலையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாது என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாநிலங்களுக்கு இடையிலான மக்களவை இட ஒதுக்கீட்டு விகிதத்தைத் தீர்மானிக்க 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பே தொடர்ந்து அடிப்படையாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு மாநிலத்தின் மக்களவை இடங்களும் 50% அதிகரித்து தற்போதைய விகிதாச்சாரம் அப்படியே பாதுகாக்கப்படும்.

அதேநேரம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்ளே தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்வதற்கு 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்படும்.

மகளிர் இடஒதுக்கீடு

எஸ்சி/எஸ்டி பெண்கள் உட்பட 15 ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் 33% மகளிர் இடஒதுக்கீடு

இந்த மசோதாவின் கீழ் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்கள் உட்பட மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.

இந்த இடஒதுக்கீடு முதற்கட்டமாக 15 ஆண்டுகளுக்கு அதாவது 3 மக்களவை பதவிக்காலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் அடுத்தடுத்த சட்டங்கள் மூலம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டுமே இடஒதுக்கீடு நிரந்தரமாக தங்குவதைத் தவிர்க்க சுழற்சி முறையில் தொகுதிகள் மாற்றப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொகுதி மறுவரையறை ஆணையம்

புதிய தொகுதி மறுவரையறை ஆணையம் மற்றும் 2051 வரை தொகுதி எல்லைகள் முடக்கம்

நாடாளுமன்றத்தில் இந்த 3 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட பிறகு புதிய தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டு 2029 மக்களவை தேர்தலுக்கு முன்பாக புதிய தொகுதி வரைபடம் தயாரிக்கப்படும்.

இந்த நடவடிக்கையின் மூலம் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தொகுதிகள் 403-லிருந்து 650 ஆக உயர்த்தப்படுவதுடன் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளும் 50% அதிகரிக்கப்படும்.

மறுவரையறை பணிகள் முடிந்த பிறகு திருத்தப்பட்ட தொகுதி ஒதுக்கீடு மற்றும் எல்லைகள் 2051 ஆம் ஆண்டு வரை மாற்றப்படாமல் நிலைநிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT