Page Loader
பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 27, 2024
07:32 am

செய்தி முன்னோட்டம்

மூத்த பாஜக தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்கே அத்வானி, நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவர் முதியோர் பிரிவு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எல்.கே. அத்வானி, ஜூன் 2002-மே 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகவும், அக்டோபர் 1999 முதல் மே 2004 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1986 முதல் 1990, 1993 முதல் 1998 மற்றும் 2004 முதல் 2005 வரை பாஜக தலைவராக செயலாற்றியுள்ளார். அவருக்கு 3 மாதங்களுக்கு முன்னர்தான், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

எல்கே அத்வானி மருத்துவமனையில் அனுமதி