Loading...
பாஜக மாநிலங்களவை எம்பி ராம்ராவ் வட்குடே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்
பாஜக மாநிலங்களவை எம்பி ராம்ராவ் வட்குடே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்

பாஜக மாநிலங்களவை எம்பி ராம்ராவ் வட்குடே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 22, 2026
08:33 am

செய்தி முன்னோட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராம்ராவ் சகாராம் வட்குடே கடும் மாரடைப்பு காரணமாகக் காலமானார். டெல்லியில் இருந்த அவருக்கு நள்ளிரவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

திடீர் மறைவு

மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு மாதங்களில் நிகழ்ந்த திடீர் மறைவு

கடந்த ஏப்ரல் மாதம் சுமார் எட்டு மாதங்களுக்கு முன்புதான் பாஜக சார்பில் மகாராஷ்டிராவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக ராம்ராவ் வட்குடே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

களங்கமற்ற அரசியல் பின்னணியும் அனுபவமும் கொண்ட சிறந்த பேச்சாளராக அவர் அறியப்பட்டார்.

அவரது திடீர் மறைவு மகாராஷ்டிர மாநில அரசியல் வட்டாரத்திலும் ஹிங்கோலி மற்றும் பர்பானி மாவட்ட மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் பயணம்

சட்ட மேலவை உறுப்பினர் முதல் ஹிங்கோலி பாஜக மாவட்டத் தலைவர் வரையிலான அரசியல் பயணம்

தனது அரசியல் வாழ்க்கையில் ஆடு மற்றும் செம்மறியாடு வளர்ப்போர் கூட்டமைப்பின் தலைவராக ராம்ராவ் வட்குடே பணியாற்றியுள்ளார்.

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பின்னர் 2021 ஆம் ஆண்டு ஹிங்கோலி மாவட்ட பாஜக தலைவராகவும் மக்களவைத் தொகுதித் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவின் தங்கர் சமூகத்தின் முக்கிய முகமாகத் திகழ்ந்த ராம்ராவ் வட்குடே

மகாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள தங்கர் சமூகத்தின் முக்கியத் தலைவராக ராம்ராவ் வட்குடே திகழ்ந்தார்.

எளிய தொண்டராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கித் தனது கடின உழைப்பால் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரை உயர்ந்தவர்.

அவரது மறைவுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர், பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT