Page Loader
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயரை சூட்டிய தமிழக அரசு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயரை சூட்டிய தமிழக அரசு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயரை சூட்டிய தமிழக அரசு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 12, 2024
05:44 pm

செய்தி முன்னோட்டம்

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் விழாவும் நடைபெறும். குறிப்பாக, மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், அதனைத்தொடர்ந்து, பாலமேடு, மற்றும் உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இத்தனை காலமும், இந்த ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனியாக இடம் எதுவும் இல்லாமல் இருந்தது. வாடிவாசல் அருகேயுள்ள பிரதான காலரியில் முக்கிய பிரமுகர்கள் அமர்வதுக்கு மட்டும் தற்காலிக இடம் அமைக்கப்பட்டு வந்தது. பொதுமக்களும், பார்வையாளர்களும் அமர சரியான இடம் இருந்ததில்லை. இது ஒரு கோரிக்கையாக வைக்கப்பட்டது. அதற்காக, தமிழக அரசு சார்பில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

card 2

66 ஏக்கரில் பிரமாண்ட திடல் 

இந்த பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம், 66 ஏக்கர் பரப்பளவில், ரூ.44 கோடி மதிப்பில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தினை விரைவில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனினும் நடப்பது பொங்கல் திருவிழா இந்த வாரத்தில் தொடங்குகிற நிலையில், இந்த அரங்கத்தினை இப்போதைக்கு திறப்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனால், இந்த புதிய அரங்கத்தில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாது என செய்திகள் தெரிவிக்கின்றன.

embed

ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயர்

#BREAKING | மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்குக்கு, 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது#SunNews | #Alanganallur | #Jallikattu | #Kalaignar100 | @mkstalin pic.twitter.com/5xDIwFMvHZ— Sun News (@sunnewstamil) January 12, 2024