NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் IAF விமானத்தில் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு பயணம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் IAF விமானத்தில் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு பயணம் 
    4.5 கிமீ நீளம் கொண்ட சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நவம்பர் 12 அன்று இடிந்து விழுந்தது.

    உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் IAF விமானத்தில் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு பயணம் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 29, 2023
    02:10 pm

    செய்தி முன்னோட்டம்

    17 நாட்களுக்கு பிறகு உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று இந்திய விமானப்படை(IAF) விமானத்தின் உதவியோடு எய்ம்ஸ் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    4.5 கிமீ நீளம் கொண்ட சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நவம்பர் 12 அன்று இடிந்து விழுந்தது.

    அந்த சமயத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கப்பாதைக்குள்ளேயே சிக்கி கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் லட்சிய திட்டங்களில் ஒன்றான சார் தாம் யாத்திரை பாதையின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டு வந்தது.

    இந்நிலையில், 17 நாளாக நடந்து வந்த துளையிடும் பணி நேற்று இரவு 7 மணியளவில் முடிவடைந்தது.

    ட்ஜ்வ்கின்ள

    தொழிலாளர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர் 

    அதன் பிறகு, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் சிக்கியிருந்த ஒவ்வொருவரையும் ஸ்ட்ரெச்சரில் வைத்து வெளியே இழுத்தனர்.

    அதனை தொடர்ந்து, இன்று அந்த 41 தொழிலாளர்களும் இந்திய விமானப்படையை(IAF) சேர்ந்த சினூக் ஹெலிகாப்டரின் உதவியோடு எய்ம்ஸ் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    தொழிலாளர்கள் யாருக்கும் வெளிப்புற காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், மருத்துவ சோதனைகளை முன்கூட்டியே முடித்துவிடுவது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

    இதற்கிடையில், சீனியலிசூர் மருத்துவமனையில் வைத்து தொழிலாளர்களை சந்தித்த உத்தரகாண்ட் முதல்வர் தாமி, தொழிலாளர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    இந்தியா

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    உத்தரகாண்ட்

    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  கனமழை
    கன்வார் யாத்திரை: ஹரித்வாரில் 30,000 டன் குப்பைகள் குவிந்துள்ளன இந்தியா
    உத்தரகாண்ட்: மின்மாற்றி வெடித்ததால் ஒரே நேரத்தில் 15 பேர் பலி காவல்துறை

    இந்தியா

    இந்தியாவில் வெளியாகும் லோட்டஸ் நிறுவனத்தின் இரண்டாவது கார், எமைரா! ஆட்டோமொபைல்
    இந்தியாவில் கேமிங் மீது மாறி வரும் மனநிலை, புதிய ஆய்வு முடிவு கேம்ஸ்
    டிசம்பர் 1 முதல் இந்தியர்களுக்கு இலவச விசாவை அறிவித்தது மலேசியா மலேசியா
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இன்று தொடங்குகிறது கைகளால் துளையிடும் பணி உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025