Page Loader
டெல்லியில் நிலநடுக்கம்: 4.0 ரிக்டர் அளவாக பதிவு, பின்னதிர்வுகள் ஏற்படும் என எச்சரிக்கை
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) வசிப்பவர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது

டெல்லியில் நிலநடுக்கம்: 4.0 ரிக்டர் அளவாக பதிவு, பின்னதிர்வுகள் ஏற்படும் என எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2025
07:53 am

செய்தி முன்னோட்டம்

திங்கள்கிழமை அதிகாலை தேசிய தலைநகர் டெல்லியில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) வசிப்பவர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. தெற்கு டெல்லியின் தௌலா குவானில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான PTIயிடம் தெரிவித்தார். காலை 5:36 மணிக்கு ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் X இல் எழுதியது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் குடியிருப்புப் பகுதிகளில் உணரப்படும் அளவுக்கு வலுவாக இருந்ததால், குடியிருப்பாளர்களிடையே பீதி ஏற்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

எச்சரிக்கை

பின் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பிரதமர் எச்சரிக்கை

நிலஅதிர்வுகள் ஏற்பட்டதும், பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய மக்கள் அமைதியாக இருக்கவும், பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக் கொண்டார். அவர் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும், சாத்தியமான பின்அதிர்வுகளுக்கு எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்,"என்று அவர் ட்வீட் செய்துள்ளார். டெல்லி காவல்துறையும் X இல்,"டெல்லி, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்! எந்த அவசர உதவிக்கும், 112 ஐ டயல் செய்யுங்கள்" என்று எழுதியது. ரிக்டர் அளவு 4.0 ஆக இருந்தபோதிலும், நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததாக பல X பயனர்கள் கூறினர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post