
மணிப்பூர்: காணாமல் போன 2 மெய்டே மாணவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
மணிப்பூரில் மொபைல் சேவை மீண்டும் துவங்கியதும், ஜூலை 6 ஆம் தேதி பிஷ்ணுபூர் அருகே காணாமல் போன இரண்டு மெய்டே மாணவர்களின் சடலங்களின் புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் மொபைல் சேவை மீண்டும் துவங்கியதும், வைரலான இந்த புகைப்படங்களில் ஒன்றில், மாணவர்களின் பின்னணியில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நிற்பது போலவும், இந்த மாணவர்கள் ஆதரவற்ற நிலையில் அமர்ந்திருப்பது போல இருந்தது.
மற்றொரு படத்தில் தான், அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது போல உள்ளது. ஹேம்ஜித்தின் தலையை வெட்டப்பட்டு இருந்தது, மேலும் ஒரு காட்டுப் பகுதியில் அவர்களின் உடல்கள் கிடப்பது போல அந்த புகைப்படத்தில் உள்ளது.
card 2
மணிப்பூர் அரசு உத்திரவாதம்
இதனை தொடர்ந்து, கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மாநில அரசு உறுதியளித்துள்ளது.
மேலும் இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மே 3 முதல், பழங்குடி குகி-ஜோ மற்றும் மெய்டேய் சமூகங்களுக்கு இடையிலான இன வன்முறைக்கு மத்தியில், மணிப்பூரில் பதியப்பட்ட பல வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
மணிப்பூர் அரசு, பொதுமக்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், புகைப்படங்கள் வைரலானதை அடுத்து , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் பிரேன் சிங்கிடம் பேசியதாக கூறப்படுகிறது.
மத்திய பாதுகாப்பு அமைப்புகளின் ஆதரவையும், நடவடிக்கையையும் அளிப்பதாக, அமித் ஷா உறுதியளித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.