
vlog மோகம்: குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதை வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கிய யூட்யூபர் இர்பான்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பிரபல ஃபூட் பிளாகர் மற்றும் யூடியூபர் இர்பான்.
இவர் பல உணவுகளை ருசிபார்த்து ரெவ்யூ செய்து பிரபலம் அடைந்தார்.
அதன் தொடர்ச்சியாக தனது யூடியூப் சேனலின் மூலம் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய வீடியோக்களும் அவ்வப்போது அவர் வெளியிடுவது வழக்கம்.
அவருடைய திருமணம் மற்றும் வீட்டு நிகழ்ச்சிகளைப் பற்றிய வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், அவர் தனது மனைவியுடன் துபாய்க்கு சென்ற போது, மருத்துவமனையில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைச் சரிபார்த்ததை தனது யூடியூபில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும்.
இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட இர்பான் தற்போது மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ரீல்ஸ் மோகம்
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி ரீலிஸ் எடுத்த இர்பான்
இந்த நிலையில், தனது மனைவியில் பிரசவத்தின் போது, அறுவை சிகிச்சை அரங்கிற்குச் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை தானாகவே வெட்டும் வீடியோவையும் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. இது தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
தமிழக மருத்துவத்துறையின் வல்லுனரால் கூற்றின்படி, அரசு பதிவு பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அரங்கில் செல்ல வேண்டும்.
மேலும் கத்தரிக்கோல் போன்ற மருத்துவ உபகரணங்களை மருத்துவர்கள் மட்டுமே கையாள வேண்டும் என்பதனால், இர்பான் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
"போலீஸ் Complaint தான் குடுக்கணும்"கேமராவுடன் உள்ளே சென்று VLOG | தொப்புள்கொடி வெட்டிய சர்ச்சை #youtuber | #irfan | #hospital | #birth | #child | #viralvideo | #Issue | #BornBabyVideo #thanthitv pic.twitter.com/mkVnjyp0wf
— Thanthi TV (@ThanthiTV) October 21, 2024
மருத்துவமனைக்கும் நோட்டீஸ்
இந்த விவகாரத்தில் உடன் செயல்பட்ட மருத்துவமனைக்கும் நோட்டீஸ்
இது தொடர்பாக ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் ராஜமூர்த்தி கூறியதாவது, "இர்பான் வெளியிட்ட இந்த வீடியோ குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். அப்போது எடுத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், காவல் துறையில் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்."
சுகப்பிரசவத்தின் போது, மனைவியுடன் கணவர் இருப்பது சரியானது, ஆனால் அறுவை சிகிச்சை அரங்கில் மருத்துவர் மற்றும் பணியாளர்களை தவிர யாரும் இருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனியுடன் தொடர்புடைய மருத்துவர்கள், வீடியோ எடுப்பதற்கும் தொப்புள் கொடியை வெட்டுவதற்கும் அனுமதி வழங்கிய விதம் குறித்தும் விளக்கம் கேட்கப்படும் என அவர் கூறினார். மேலும், யூடியூப்பிற்கு அந்த வீடியோவை நீக்குவதற்கான கடிதம் எழுதவுள்ளதாகவும் தெரிவித்தார்.