NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / படப்பிடிப்புக்கு திரும்பினார் விஜய் ஆண்டனி?- மீண்டும் நடிக்க தொடங்கியதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    படப்பிடிப்புக்கு திரும்பினார் விஜய் ஆண்டனி?- மீண்டும் நடிக்க தொடங்கியதாக தகவல்
    மகள் இறந்த ஒரு வாரத்திற்குள் விஜய் ஆண்டனி மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பியதாக தகவல்

    படப்பிடிப்புக்கு திரும்பினார் விஜய் ஆண்டனி?- மீண்டும் நடிக்க தொடங்கியதாக தகவல்

    எழுதியவர் Srinath r
    திருத்தியவர் Venkatalakshmi V
    Sep 25, 2023
    06:37 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகளின் இறப்பிற்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த மாதம், 19 ஆம் தேதி விஜய் ஆண்டனியின் மகள் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனால் மனம் உடைந்த விஜய் ஆண்டனி, தன்மகள் இறந்துவிட்டாலும் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதாகவும், இனி அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டதாகவும் ஒரு உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    மகளை இழந்த மனவேதனையில் இருந்து மீண்டு வரும் விஜய் ஆண்டனி திரைப்படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுமுக இயக்குனர் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வந்த விஜய் ஆண்டனி, பெங்களூரில் பட குழுவுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    card 2

    தயாரிப்பாளர்களுக்காக படப்பிடிப்பிற்கு சென்ற விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனி கடைசியாக கொலை படத்தில் நடித்திருந்தார்.

    படம் சுமாராக போன நிலையில், அடுத்ததாக CS அமுதன் இயக்கத்தில் ரத்தம் திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

    அக்டோபர் முதல் வாரத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் தொடங்கவில்லை.

    அதேபோல, புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கம் படத்தின் படப்பிடிப்பு தயாராக இருந்த நிலையில், விஜய் ஆண்டனி வாழ்க்கையில் இப்படி ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தது.

    எனினும், தயாரிப்பாளர் நஷ்டப்படக்கூடாது என, விஜய் ஆண்டனி படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஒவ்வொரு முறை, அவரது வாழ்க்கையில் மீளாத்துயரம் நேரும் போதும், அதிலிருந்து மீண்டு வரும் விஜய் ஆண்டனி பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார் என்பது மறுப்பதற்கில்லை

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்பட துவக்கம்
    விஜய் ஆண்டனி
    பெங்களூர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    திரைப்பட அறிவிப்பு

    கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல் கார்த்தி
    கார்த்தி நடிக்கும் ஜப்பான் கதை இவரை பற்றியதா? கார்த்தி
    ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில், ஹனுமானுக்கு ஒரு சீட்! தயாரிப்பாளர்களின் வினோத அறிவிப்பு  திரைப்படம்
    நயன்தாரா- ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு  ஜெயம் ரவி

    திரைப்பட துவக்கம்

    'பரிதாபங்கள்' கோபி - சுதாகர் நடிக்கும் புதிய படம் இன்று தொடக்கம் திரைப்பட அறிவிப்பு
    காந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிப்பு திரைப்பட அறிவிப்பு
    டாடா பட இயக்குனரின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது; வெளியான அறிவிப்பு கோலிவுட்
    9 வருடங்கள் கழித்து தமிழில் ரீ -என்ட்ரி ஆகும் மீரா ஜாஸ்மின் தமிழ் திரைப்படம்

    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு  ட்விட்டர்

    பெங்களூர்

    ஆட்டோவில் ஏற மறுத்தவர் மீது ஆட்டோவை விட்டு ஏற்றிய ஆட்டோ ஓட்டுநர்  இந்தியா
    கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான்.. எப்போது துவக்கம்? கர்நாடகா
    பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர் விமானம்
    தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்! ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025