
விடுதலை 1 & 2 படத்திற்காக ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் வெற்றிமாறனுக்கு கிடைத்த மரியாதை
செய்தி முன்னோட்டம்
நெதர்லாண்ட்ஸில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டேம் பட விழாவிற்கு வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படம் தேர்வாகியிருந்தது.
சமீபத்தில் விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படத்தினை கண்டவர்கள், கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் 'விடுதலை'.
ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் முதலில் ஒரு பாகமாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் படத்தின் ஆழமான திரைக்கதை காரணமாக இரண்டு பாகங்களாக எடுத்துவருகிறார் வெற்றிமாறன்.
முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை, இசைஞானி இளையராஜா.
ட்விட்டர் அஞ்சல்
வெற்றிமாறனுக்கு கிளாப்ஸ்!!
#Viduthalai Part-1 & Part-2 received a standing APPLAUSE of 15 MINS from the audience after screening 👀🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) February 1, 2024
Seems VetriMaaran has done something in Part-2 (Portions so far completed)🤞 pic.twitter.com/6GYOJtY737