
இஸ்ரேல் போர் எதிரொலி- நாடு திரும்பும் விடாமுயற்சி படக்குழு
செய்தி முன்னோட்டம்
பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ்-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தொடரும் போரால் 'விடாமுயற்சி' பட குழுவினர் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'துணிவு' திரைப்படத்திற்கு பின் நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் எழுந்திருந்த நிலையில் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.
பட அறிவிப்பு வெளியாகி 5 மாதங்களாக திரைப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில், 'விடாமுயற்சி' திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவதாக தகவல் வெளியானது.
பின்னர் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி, படப்பிடிப்புக்காக படக்குழு அஜர்பைஜான் சென்றதாக கூறப்பட்டது.
தற்போது இஸ்ரேல்- ஹமாஸ் போரால் விடாமுயற்சி படக்குழு நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
நாடு திரும்பும் விடாமுயற்சி படக்குழு?
Israel War… Heard #VidaaMuyarachi Team
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 10, 2023
Is planning to return back to India.
[Buzz]