அஜித் நடிக்கும் 'டேர் டெவில்' திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறாரா உன்னி முகுந்தன்?
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் 'டேர் டெவில்' திரைப்படத்தில், பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'குட் பேட் அக்லி' வெற்றிக்கு பிறகு அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில், மிக முக்கிய வில்லன் கதாபாத்திரத்திற்கு முதலில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பரிசீலிக்கப்பட்டார். 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், மோகன்லாலால் இப்படத்திற்கு தேதிகளை ஒதுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, 'மார்கோ' படம் மூலம் ஆக்ஷன் அவதாரத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற உன்னி முகுந்தனுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தயாரிப்பு
தயாரிப்பும், படப்பிடிப்பு விவரமும்
அஜித் குமாரின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினி 'பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்' சார்பில் தயாரிப்பாளராக அவதரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.
'வேதாளம்', 'விவேகம்' படங்களைத் தொடர்ந்து அஜித்தின் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 2 அன்று தொடங்கும் என்றும், 2027-ஆம் ஆண்டின் மத்தியில் உலகளவில் திரைக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டேர் டெவில்' படத்தில் உன்னி முகுந்தன் இணைந்திருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.