
கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி: பொங்கல் ரிலீஸ் திரைப்படங்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு
செய்தி முன்னோட்டம்
இந்த பொங்கலுக்கு, தனுஷின் 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயனின் 'அயலான்' மற்றும் அருண் விஜயின் 'மிஷன்-சாப்டர் 1' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
கூடுதலாக விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடித்துள்ள 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படமும் வெளியாக தயாராக உள்ளது.
இந்த படங்களுக்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பறந்து பறந்து படத்திற்காக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் மற்றும் தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பு உண்டு.
அந்த வகையில் இந்த ஆண்டு நான்கு பெரிய படங்கள் வெளியாவதால், திரையரங்குகள் யாருக்கு முன்னுரிமை தருவது என சற்றே குழம்பி போயுள்ளன.
card 2
அதிக காட்சிகளுக்கு அனுமதி
இந்த குழப்பத்தை தவிர்க்க, அயலான் படக்குழுவினர், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததாக செய்திகள் கூறுகின்றன.
அதன்படி, பொங்கலுக்கு வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்கவும், ரசிகர்களின் நலன் கருதியும், தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும், ஜனவரி 12 தொடங்கி ஜனவரி 18 வரை ஒரு வாரத்திற்கு அதிக காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் முதல் காட்சி காலை 9 மணிக்கு துவங்கும். அதன்படி, நாள் ஒன்றிற்கு ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.