'சலார்' முதல் 'குய்கோ' வரை- இந்த வாரம் தமிழில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக திரையரங்குகள் கடந்த சில வாரங்களாக பல திரைப்படங்களின் வெளியிட்டால் பிசியாக இருந்த நிலையில், இந்த வாரமும் 6 தமிழ் படங்கள் வெளியாகின்றன. ₹400 கோடி பட்ஜெட்டில் உருவான சலார் பகுதி 1 முதல் மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் கடைசி படமான சபாநாயகன் படம் வரை, இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும், அவை எந்த தேதியில் வெளியாகிறது என்பதையும், இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2nd card
சாலார் : பகுதி 1 - சிஸ் பையர்
கேஜிஎப் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஹோம்பலே பிலிம்ஸ், கேஜிஎப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ள நிலையில், படமும் கேஜிஎப் சாயலில் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. அதிகார மாற்றத்திற்கு உள்ளாகும் கான்சார் நகரத்தில் கதை நடைபெறுகிறது. வர்தா(பிரபாஸ்) அதிகாரத்தை அடைவது அச்சுறுத்தப்படும் போது, அவன் தன் பால்ய நண்பன் தேவாவின்(பிரித்விராஜ்) உதவியை நாடுவது படத்தின் கதை. சுருதிஹாசன் மற்றும் ஜெகபதி பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் 'A' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், படம் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.
3rd card
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
சத்தியமூர்த்தி ஹீரோவா நடிக்கும் இப்படத்தில், பரிதாபங்கள் புகழ் கோபி-சுதாகர், யாஷிகா ஆனந்த், முனீஸ் காந்த், ஷா ரா, ரித்திகா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பல வித்தியாசமான குணங்களைக் கொண்டவர்கள், மர்மமான திரையரங்குக்குள் சிக்கிக் கொள்வதும், அங்கிருந்து வெளியேற அவர்கள் படும் பாடும் படத்தின் கதை. இயக்குனர் ரமேஷ் வெங்கட் படத்தை திகில் படமாக்க உருவாக்கியுள்ளார். இப்படமும் வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியாகியது.
4th card
அரணம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜமீன்தார குடும்பத்திற்குள் நடக்கும் க்ரைம் திரில்லரே படத்தின் கதை. மஸ்காரா போட்டு மயக்குறியே, உசுமுலாரசே உசுமுலரசே உள்ளிட்ட பல பாடல்களை எழுதி உள்ள பாடலாசிரியர் பிரியன், இப்படத்தை இயக்கி கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். இவருடன், பாய்ஸ் திரைப்படத்தில் நடித்த லகுபரன், வர்ஷா சரவணகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது.
6th card
சபாநாயகன்
சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிக்கும் சபாநாயகன் திரைப்படத்தில், ஹீரோயின்களாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். அசோக் செல்வனுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய, ஓ மை கடவுளே திரைப்படத்திற்கு இசையமைத்த, லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அனைவருக்கும் அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி நாஸ்டாலஜியா நினைவுகளை வர வைக்கும் படம் எனவும், பள்ளி, கல்லூரி மற்றும் திருமண வாழ்க்கை என வாழ்க்கையின் மூன்று கட்டங்களை பற்றி, படத்தில் பேசி உள்ளதாக இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இது மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின், கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
7th card
ஆயிரம் பொற்காசுகள்
இரண்டு ஆண்கள் தற்செயலாக ஆயிரம் பொற்காசுகளை கண்டால், அவர்களது வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பது, வித்தார்த், அருந்ததி நாயர் நடிப்பில் ரவி முருகையா இயக்கியுள்ள ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்தின் ஒன் லைனர். அவர்களுக்கு கிடைக்கும் பொற்காசுகள் குறித்து ஊருக்கு தெரிய வர அவர்களும் பங்கு கேட்கிறார்கள். இது தொடர்பாக நடக்கும் சர்ச்சையும், சச்சரவுகளுமே படத்தின் கதை. படத்தை குறித்த விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் படத்திற்கு 3/5 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.
8th card
ஜிகிரி தோஸ்த்
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவியாளரும், பல விருதுகளை வென்ற குறும்படங்களை இயக்கிய அறன், இப்படத்தை எழுதி இயக்கி முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன், கெளதம் சுந்தரராஜன், சிவம், மதுமிதா, அம்மு அபிராமி, வி.ஜே.ஆஷிக், பவித்ர லக்ஷ்மி, அனுபமாகுமார், மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளனர். காந்தியின் ஹிட்லரும் ஒரே வீட்டில் வாழ்ந்தால் என்ன ஆகும், என்ற சூழ்நிலையை படத்தின் ஒன் லைனர்.
5th card
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
குய்கோ யோகி பாபு, விதார்த், துர்கா, இளவரசு, முத்துக்குமார், வினோதினி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை, அருள் செழியன் இயக்கியிருந்தார். படத்தில் சவுதி அரேபிய ஒட்டக விவசாயியாக இருக்கும் யோகி பாபு, அவரது தாயின் மறைவுக்காக நாடு திரும்புகிறார். நாடு திரும்பும் வரை அவரது தாயை, ஃப்ரீசர் பெட்டியில் வைக்கின்றனர் குடும்பத்தினர். தாயை அடக்கம் செய்த பின்னும், அந்த பெட்டியை யோகி பாபு வைத்துக் கொள்கிறார். அது அவரது வாழ்க்கையில் செய்யும் சம்பவங்கள் படத்தின் கதை. திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், 22 ஆம் தேதி, நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நெட்ஃபிலிக்ஸ் வெளியாகிறது.