LOADING...
தமிழ் சினிமாவின் இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள்
தமிழில் திரையரங்குகளில் இந்த வாரம் புது படம் எதுவும் வெளியாகவில்லை.

தமிழ் சினிமாவின் இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள்

எழுதியவர் Srinath r
Nov 01, 2023
04:48 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் இன்னும் சிறப்பாக ஓடி வருவது மற்றும் அடுத்த வாரம் தீபாவளி வர இருப்பதால், இந்த வாரம் தமிழில் எந்த புது படங்களும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதேசமயம் ஓடிடியில், 4 திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். ஜவான்- அட்லீ இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், உலக அளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஷாருகானின் பிறந்தநாளை ஒட்டி நாளை, இத்திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட் நாளை நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

2nd card

ஓடிடி வெளியீடுகள்-2

ரத்தம்- விஜய் ஆண்டனி, நந்திதா, மகிமா நம்பியார் உள்ளிட்டோ நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கியுள்ளார். முன்னணி பதிப்பக நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜய் ஆண்டனி, தன் மனைவி இறந்ததற்கு பின், தன் மகளுடன் தனிமையான இடத்தில் வசிக்கிறார். அவரது நண்பர் கொல்லப்படும் போது, அதை கண்டறிய வேண்டிய கட்டாயத்திற்கு விஜய் ஆண்டனி தள்ளப்படுகிறார். அவர் கொலையை கண்டறிந்தாரா என்பது தான் படத்தின் மீதி கதை. இத்திரைப்படம் நவம்பர் 3 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

3rd card

 ஓடிடி வெளியீடுகள்-3

தமிழ் குடிமகன்- இயக்குனர் எசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில், இயக்குனர் சேரன், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, மலையாள நடிகர் லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இறுதிச் சடங்கு செய்யும் சின்னசாமி என்பவர் அந்த தொழிலை விட்டு விலக நினைக்கிறார். அதற்கு அந்த ஊர் மக்கள் எதிராக உள்ளனர். அந்த ஊரை எதிர்த்து அவர் நீதிமன்றம் செல்கிறார். நீதிமன்றத்தின் தீர்ப்பே படத்தின் மீதி கதை. இத்திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது.

4th card

ஓடிடி வெளியீடுகள்-4

இறுகப்பற்று- விக்ரம் பிரபு, விதார்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை, யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். குடும்ப உறவுகளுக்குள் எழும் சிக்கலையும், அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்த அந்த சிக்கல்களை கையாள்வது குறித்தும் இப்படம் பேசியுள்ளது. திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், விக்ரம் பிரபுவிற்கு நீண்ட நாட்களுக்குப் பின் ஹிட் படமாக அமைந்தது. நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் இப்படம் வரும் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.