விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போனதும், பொங்கலை குறி வைத்து 10 தமிழ்திரைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
2025 புத்தாண்டு தொடங்கிவிட்டது. இந்த மாதம் பெரிய திரைகளில் பல படங்கள் வரவுள்ளன.
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய நிலையில், பல புதிய படங்கள் பண்டிகை காலத்தை ஒட்டி ரிலீஸ் தேதிகளை அறிவித்துள்ளன.
கிட்டத்தட்ட 10 படங்கள் ஜனவரி 2025ல் வெளியாவதாக அறிவித்துள்ளது.
அதில் சமீபமாக விஷால் நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் 13 வருடமாக கிடப்பில் இருந்த மதகஜராஜாவும் அடங்கும்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ:
#1
பொங்கல் திரைப்பட வெளியீடுகள்
வணங்கான்: அருண் விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான வணங்கான் ஜனவரி 10ஆம் தேதி வெளிவர உள்ளது.
இயக்குனர் பாலா எழுதி, இணைத் தயாரித்து, இயக்கியிருக்கும் இந்த அதிரடித் திரைப்படத்தில் ஆரம்பத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷ்னி பிரகாஷ் நடிக்கிறார். படத்தில் மேலும் மிஸ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
மதராஸ்காரன்: மலையாள படவுலகில் பற்பல நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாகும் படம் மதராஸ்காரன். வாலி மோகன் தாஸ் இயக்கிய இப்படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 10 அன்று திரைக்கு வரவுள்ளது.
#2
பொங்கல் திரைப்பட வெளியீடுகள்
காதலிக்க நேரமில்லை: நடிகர் ஜெயம் ரவியின் இந்த ஆண்டின் முதல் வெளியீடான காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் அன்று ஜனவரி 14 அன்று வெளியாகிறது.
ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கும் இந்த படத்தை கிருத்திகா உதயநிதி எழுதி இயக்கியுள்ளார்.
இதை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.
இப்படத்தில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன் நடிக்கிறார்.
நடிகர்கள் யோகி பாபு, வினய் ராய், ஜான் கொக்கன் மற்றும் லால் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்தின் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்துள்ளார்.
#3
பொங்கல் திரைப்பட வெளியீடுகள்
நேசிப்பாயா: நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளியின் அறிமுகம் ஆகும் திரைப்படம் நேசிப்பாயா.
ரொமாண்டிக் த்ரில்லர் படமான இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறார் மற்றும் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ளது.
இதில் அதிதி ஷங்கர், சரத்குமார், பிரபு, குஷ்பு ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஓம் பிரகாஷ் மற்றும் கேமரூன் எரிக் பிரைசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
#4
பொங்கல் திரைப்பட வெளியீடுகள்
அகத்தியா: பா.விஜய் எழுதி இயக்கிய ஒரு பீரியட் ஹாரர் திரில்லர் திரைப்படம் அகத்தியா.
இப்படத்தில் ஜீவா, ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
எட்வர்ட் சோனன்ப்ளிக், யோகி பாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, ராதா ரவி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஐசரி கே. கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் தயாரித்துள்ளார்.
சுமோ: நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு காத்திருந்த இந்த படத்தினை ஹோசிமின் இயக்கியுள்ளார்.
'மிர்ச்சி' சிவா முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.
இவருடன் சுமோ பயில்வான் யோஷினோரி தாஷிரோ நடித்துள்ளார்.
இப்படமும் வேல்ஸ் இன்டெர்னஷனல் தயாரித்துள்ளது. ராஜிவ் மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
#5
பொங்கல் திரைப்பட வெளியீடுகள்
கேம் சேஞ்சர்: ராம் சரண் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேம்சேஞ்சர்.
இப்படம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகிறது. SJ.சூர்யா வில்லனாக நடிக்கும் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, ஜெயராம் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்தில் ராம்சரண் இரு வேடங்களில் நடிக்கிறார். படத்திற்கு இசை தமன்.
படைத்தலைவன்: கேப்டன் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை U.அன்பு இயக்கியுள்ளார்.
மலைகளும், காடுகளும் பின்னணியாக கொண்ட இந்த படம், ஒரு யானை பாகனை பற்றியது என படத்தின் போஸ்டர் வெளிப்படுத்துகிறது.
#6
பொங்கல் திரைப்பட வெளியீடுகள்
மதகஜராஜா: சுந்தர் சி இயக்கத்தில்,விஷால் நடிக்க, நிதி சிக்கல்களால் 2013 முதல் கிடப்பில் கிடந்த இந்த படத்தில், சந்தானம், வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படம் பொங்கல் ரேஸில் கலந்து கொண்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியானது. மதகஜ ராஜாவின் படப்பிடிப்பு 2012 இல் துவங்கியது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், படம் 2013 இல் நிதி சிக்கல்களால் நீண்ட காலமாக வெளியிடப்படாமல் இருந்தது.
இதை தாண்டி, கிஷன் தாஸ் நடிப்பில் தருணம், சிபிராஜ் நடிப்பில் டென் ஹவர்ஸ் உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது.