Page Loader
இரண்டு நாளில் ரெட்ரோ ஆடியோ லான்ச்; ரஜினிகாந்திற்கு அழைப்பு எனத்தகவல்
ஏப்ரல் 18 ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெறும்

இரண்டு நாளில் ரெட்ரோ ஆடியோ லான்ச்; ரஜினிகாந்திற்கு அழைப்பு எனத்தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 16, 2025
07:11 pm

செய்தி முன்னோட்டம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் சூர்யாவின் அடுத்த படமான 'ரெட்ரோ'வின் தயாரிப்பாளர்கள் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா எப்போது என தற்போது அறிவித்துள்ளனர். அதன்படி, இரண்டு நாட்களில், ஏப்ரல் 18 ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெறும் என அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த பிரமாண்டமான நிகழ்விற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை ரெட்ரோ படத்திலிருந்து சந்தோஷ் நாராயணன் இசையில் மூன்று பாடல்கள் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன், பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 1 அன்று திரைக்கு வரவுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post