
அம்பானி வீட்டு விசேஷத்தில், ராம் சரணை, ஷாருக்கான் அவமதித்ததாக ஒப்பனை கலைஞர் குற்றசாட்டு
செய்தி முன்னோட்டம்
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியின் போது ராம் சரணை மேடைக்கு அழைத்த ஷாருக்கான், அவரை அவமரியாதை செய்ததாக உபாசனா கொனிடேலாவின் (ராம் சரணின் மனைவி) ஒப்பனை கலைஞர் கூறியுள்ளார்.
இணையத்தில் பலரும் இந்த செய்திக்கு உடன்படவில்லை.
இருப்பினும் ஒரு சிலர், இதை இனவெறியாக கருதுவதாக கூறுகின்றனர்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஜாம்நகரில் நடைபெற்ற அம்பானி வீட்டு விசேஷத்தில், தெலுங்கு நடிகர் ராம் சரண்-ஐ மேடைக்கு அழைத்த விதத்தில், அவரை அவமானப்படுத்தியாக, குறிப்பாக ஷாருக்கான் 'இட்லி வடை' என கூறி ராம் சரணின் பெயரை அழைத்ததாக என்று அவரது ஒப்பனை கலைஞர், ஜெபா ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ஆதாரமாக வெளியிடப்பட்ட வீடியோ
What should Ram Charan call Shahrukh Khan then?#RamCharan #ShahRukhKhan pic.twitter.com/oeHz1vp5fo
— Kreately.in (@KreatelyMedia) March 5, 2024
ஷாருக்கான்
குற்றசாட்டை மறுக்கும் ரசிகர்கள்
தனது குற்றச்சாட்டை ஆதரிப்பதற்காக இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவைப் பகிர்ந்த ஜெபா ஹாசன், அவர் அப்படி அழைத்தது தனக்கு பிடிக்காத காரணத்தால், உடனே அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறினார்.
இந்த நிலையில், ஷாருக் ரசிகர்கள் பலரும், அவரது முந்தைய படங்களில் ஒன்றான 'ஒன் 2 கா 4' இன் உரையாடல்களைப் போலவே இருப்பதாகவும், இது நகைச்சுவையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் ஒருமுறை தமிழ்நாட்டின் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதும், 'தமிழ் தெரியுமா?' என கேட்கப்பட்டது.
அதற்கும் அவர் இதே பாணியில் தான் பதில் கூறியுள்ளார் என்ற ஆதார வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
'தமிழ் தெரியுமா?'
Whenever he wants to pretend like he is aware of Tamil he will use this. No Tamil media triggered for this but only Telugu media who are working for particular heroes got triggered and started negativity On #RamCharan & #ShahRukhKhan
— Raghu Charanism (@RaghuCharanism7) March 5, 2024
Only the uneducated will bark at them. pic.twitter.com/rWRNYqoPgb