நாளை ஓடிடிக்கு வரும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' முதல் பாகத்தின் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த 'துரந்தர்' திரைப்படத்தின் சிறப்பு நீட்டிக்கப்பட்ட பதிப்பு (Extended Version) ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகியுள்ளது. ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான இந்த பிரம்மாண்ட ஸ்பை த்ரில்லர் திரைப்படம், தியேட்டர்களில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2025 டிசம்பர் 5 அன்று தியேட்டர்களில் வெளியாகி, பின்னர் ஜனவரியில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. தற்போது 'Dhurandhar Raw And Undekha' என்ற பெயரிலான இதன் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்,மே 22 நெட்ஃபிக்ஸ் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஆகிய தளங்களில் வெளியாகிறது. இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Aandhi aa rahi hai. Aur iss baar, extra ghatak 🔥 pic.twitter.com/ccbYFBXV4t
— Netflix India (@NetflixIndia) May 20, 2026
துரந்தர் 2
துரந்தர் 2 ரிலீஸ் எப்போது?
இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகமான 'துரந்தர் 2 ரா அண்ட் அன்தேக்கா' ஜூன் 4-ஆம் தேதி டிஜிட்டல் பிரீமியர் செய்யப்பட்டு, ஜூன் 5 முதல் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும் எனத் தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த மே 15 அன்றே நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாகிவிட்டது. படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து 'துரந்தர் 3' உருவாகுமா என்ற கேள்விக்கு, கதை முடிவடைந்து விட்டதால் ரன்வீர் சிங் இல்லாமல் வேறு நடிகர்களை வைத்து ஸ்பின்-ஆஃப் எடுக்கப்படலாம் என நடிகர் ராகேஷ் பேடி தெரிவித்துள்ளார். எனினும், இந்த ஆண்டின் இறுதியில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தயாரிப்பாளர் ஜோதி தேஷ்பாண்டே கூறியுள்ளார்.