Page Loader
ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார்; வெளியான மருத்துவ அறிக்கை
ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார்

ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார்; வெளியான மருத்துவ அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 01, 2024
05:34 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இது அவரது ரசிகர்களை மட்டுமின்றி பலரையும் கலங்க செய்தது. இதற்கிடையே, இது வழக்கமாக திட்டமிடப்பட்ட உடல் பரிசோதனை என்றும், அவரை இருதயவியல் மருத்துவர் இன்று காலை பரிசோதிப்பார் எனவும் செய்திகள் வெளியாகின. எனினும் அவர் உடல்நிலை சீராக இருப்பதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது எனவும், அதன் தொடர்ச்சியாக அவர் ICUவில் இருக்கிறார் என செய்திகள் வெளியாகவே ரசிகர்கள் கவலையுற ஆரமபித்தனர். தற்போது ரஜினிகாந்தின் உடல் நலம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கை

மருத்துவ அறிக்கை கூறுவது என்ன?

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்தினை அறுவை சிகிச்சை இல்லாமலேயே transcatheter முறைப்படி சரிசெய்யப்பட்டது. டாக்டர் சாய் சதீஷின் மருத்துவ குழு, அவருக்கு ஸ்டென்ட் பொருத்தி, ரத்தநாளத்தில் ஏற்பட்ட அழுத்தத்தினை சரி செய்து விட்டனர். அவர் குணமாக வேண்டும் என பிரதித்த ரசிகர்களுக்காக அவர் நலமுடன் இருக்கிறார் என தெரிவித்து கொள்கிறோம். இன்னும் இரு நாட்களில் அவர் வீடு திரும்பக்கூடும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post