
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி: இன்று இதயவியல் பரிசோதனை
செய்தி முன்னோட்டம்
நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அவர் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து வெளியான முதற்கட்ட தகவல்படி, இது திட்டமிட்ட மருத்துவ சிகிச்சை தான் என்றும் அவருக்கு வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சை பெறவே அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Superstar #Rajinikanth is said to be admitted to Apollo Hospitals under interventional cardiologist for an elective procedure !!
— AmuthaBharathi (@CinemaWithAB) September 30, 2024
His health condition is stable. The procedure will be done in the cath lab on Tuesday🤝
சிகிச்சை
ரஜினிக்கு இன்று இதயவியல் நிபுணர் சோதனை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஜினிக்கு இன்று காலை சிறப்பு சிகிச்சை மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும், இதயவியல் நிபுணர் சாய் சதீஷ் என்பவர் தான் இந்த பரிசோதனையை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேவை ஏற்படின் ஆஞ்சியோ சிகிச்சையும் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்த பரிசோதனைக்கு பின்னர் இரண்டு முதல் 3 நாட்கள் வரை நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்கணிப்பில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்ததும் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது பிராத்தனைகளை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 1, 2024