இளையராஜாவின் 50வது ஆண்டு விழாவில் வெளியான 'ராஜாஸ் ப்ளேலிஸ்ட்' பட அறிவிப்பு; ஹீரோ இவர்தான்
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் இயக்குநராக களம் இறங்குவது புதிய விஷயமல்ல. அந்த வரிசையில், மலையாளத்தில் வெளியான 'குடும்பஸ்தன்' திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக கவனம் ஈர்த்த சுஜித் என். சுப்ரமணியம், தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் 50-வது ஆண்டு இசை விழாவில், இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 'ராஜாஸ் ப்ளேலிஸ்ட்' என்ற பெயரில் பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வாரிசு
இளையராஜா குடும்ப வாரிசுகளின் மாஸ் கூட்டணி
'ராஜாஸ் ப்ளேலிஸ்ட்' திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமே இதன் கதையை திரைக்கதை மன்னன் மற்றும் முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு எழுதியுள்ளார் என்பதுதான். மேலும், படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் இளையராஜாவின் தம்பியான பாஸ்கரின் மகனும், வெங்கட் பிரபு - யுவனின் தம்பியுமான ஜெயன் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இளையராஜா குடும்பத்தின் மூன்று தலைமுறை வாரிசுகளின் பங்களிப்போடு, இசைஞானிக்கு ஒரு அழகான சமர்ப்பணமாக இப்படம் உருவாகி வருவதால் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Very very Happy & Proud to introduce my cousin #Jaiyan as the lead of #RajasPlaylist, the very first production from #ElephantineX
— venkat prabhu (@vp_offl) July 5, 2026
Congratulations to #Ramanan brother on this exciting new venture. Wishing the entire team a successful and memorable journey ahead.
I'm equally… pic.twitter.com/hi570Vv17F
இயக்குநர் சுஜித்
"இளையராஜா ரசிகர்களின் ஒரு அழகான பயணம்"
"இசைஞானி இளையராஜா அவர்களின் இசை ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை மையமாகக் கொண்ட ஒரு 'Rom-Com' மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த படமாக இது இருக்கும். ஐடி ஊழியர் முதல் உசிலம்பட்டி விவசாயி வரை அனைவரின் வாழ்விலும் கலந்திருக்கும் இளையராஜாவின் பாடல்களின் தொகுப்பே இந்த 'ராஜாஸ் ப்ளேலிஸ்ட்'. யுவன் சாரின் இசையமைப்பில் உருவான முதல் பாடலின் போதே நான் நெகிழ்ந்து அழுதுவிட்டேன்," என்று இயக்குநர் சுஜித் கூறியுள்ளார். படத்தில் ஜெயனுக்கு ஜோடியாக நடிகை சோனா ஒலிக்கல் நடிக்கிறார். இத்திரைப்படத்தை 'எலிஃபேண்டைன் எக்ஸ்' நிறுவனத்தின் சார்பில் ரமணன் பாலகங்காதரன் தயாரிக்கிறார். மேலும், இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தின் 'கிரியேட்டிவ் புரொடியூசராக' களம் இறங்கியிருப்பது படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.