'தளபதி 69' படத்தில் விஜய்க்கு வில்லனாகிறாரா பிரகாஷ் ராஜ்?
'GOAT' வெற்றியினைத்தொடர்ந்து தளபதி விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. தற்காலிகமாக தளபதி 69 என தலைப்பிட்ட இந்த திரைப்படம் தான் விஜய்யின் சினிமா வாழ்க்கையின் கடைசி படம் என அறிவித்துள்ளார். அதன் பின்னர் முழுதாக அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளார் விஜய். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை 2025 அக்டோபரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. இது உறுதியானால், கில்லி (2004), சிவகாசி (2005), போக்கிரி (2007), வில்லு (2009) மற்றும் வாரிசு (2023) போன்ற படங்களின் வெற்றிகரமான கூட்டணி வரிசையில் இப்படம் அமையும்.
'தளபதி 69' படத்திற்கான நட்சத்திர நடிகர்கள் பற்றிய வதந்திகள்
'தளபதி 69' படத்தில் சிம்ரன், பூஜா ஹெக்டே, சமந்தா ரூத் பிரபு, மோகன்லால், மமிதா பைஜு உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் இடம்பெறும் என வதந்திகள் பரவி வருகின்றன. பாபி தியோல் இந்த திட்டத்தில் மற்றொரு வில்லனாக சேரலாம் என்ற யூகங்களும் உள்ளன. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இருப்பினும், இறுதி நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்துக்காக விஜய்க்கு ₹275 கோடி சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.