Page Loader
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் 'பாரா' வெளியானது
இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் 'பாரா' வெளியாகியுள்ளது

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் 'பாரா' வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
May 22, 2024
05:06 pm

செய்தி முன்னோட்டம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் 'பாரா' தற்போது வெளியாகியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையில், பா.விஜய் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலின் ப்ரோமோ நேற்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், இன்று இப்பாடல் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதே படத்தின் ட்ரைலரும் வெளியாககைகூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், காளிதாஸ், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

embed

'பாரா' வெளியானது!

Waiting for this day since I was a kid.. A dream come true to make music for the master @shankarshanmugh sir and ulaganayagan @ikamalhaasan sir once again 🔥🔥🔥 Here is #Paaraa - https://t.co/rQ5IGYasZy First single from #Indian2 🥁🥁🥁 🖋️@poetpaavijay#ShruthikaSamudhrala...— Anirudh Ravichander (@anirudhofficial) May 22, 2024