துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட இயக்குனர் மாரி செல்வராஜ்
செய்தி முன்னோட்டம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் தற்போது வெளியாகியுள்ளது.
விளையாட்டு நாடகமாக உருவாகும் இந்தப் படத்தில், துருவ் விக்ரமுடன், ராஜிஷா விஜயன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
மாரி செல்வராஜின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கில், துருவ் இரட்டை தோற்றங்களில் தோன்றுகிறார்.
இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் உடன் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா, மகான் படங்களுக்கு அடுத்து மாரி செல்வராஜுடன் இணைந்துள்ளார்.
அதேபோல, மாரி செல்வராஜின் வாழை பட வெற்றியை அடுத்து இப்படம் வெளியாகவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும்
— Mari Selvaraj (@mari_selvaraj) March 7, 2025
ஏன் வருகிறேன் என்றும்
உனக்கு தெரியும்
வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும்
ஆதலால் ….
நீ கதவுகளை அடைக்கிறாய்
நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன். 🦬
—
பைசன் (காளமாடன்)#BisonKaalamaadan 🦬@applausesocial… pic.twitter.com/8ACSMdys4B
விவரங்கள்
பைசன் படத்தை பற்றிய விவரங்கள்
'பைசன்' படத்தில் கலையரசன், பசுபதி, லால், அழகம் பெருமாள் மற்றும் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி திரு படத்தொகுப்பு செய்துள்ளார்.
'பைசன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
படத்தின் கதை திருநெல்வேலி மற்றும் சென்னையில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.