LOADING...
தமிழ் சினிமாவில் மம்மூட்டியின் மெகா ரீ-என்ட்ரி! தனுஷின் 'D55' படத்தில் இணைந்தார்
தனுஷின் 'D55' படத்தில் இணைந்தார் மம்மூட்டி

தமிழ் சினிமாவில் மம்மூட்டியின் மெகா ரீ-என்ட்ரி! தனுஷின் 'D55' படத்தில் இணைந்தார்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 04, 2026
01:13 pm

செய்தி முன்னோட்டம்

மலையாள திரையுலகின் லெஜண்ட் நடிகர் மம்மூட்டி, தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார். 'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் 55-வது படத்தில் (D55) மம்மூட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே 'Kammath & Kammath' என்ற மலையாள படத்தில் தனுஷ் கௌரவ தோற்றத்தில் நடித்தபோது இணைந்து பணியாற்றினர். ஆனால், ஒரு முழுநீள தமிழ் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து திரையை பகிர்ந்து கொள்வது இதுவே முதல்முறை.

விவரங்கள்

D55 பற்றி மேலும் சில விவரங்கள்

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். 'மாரி 2' படத்திற்குப் பிறகு சாய் பல்லவி - தனுஷ் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். மேலும், 'அமரன்' வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் சாய் பல்லவி மீண்டும் இணைகிறார். இது தவிர 'பராசக்தி' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ரீலீலாவும் ஒரு நாயகியாக நடிக்கிறார். புகழ்பெற்ற இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

ரீ-என்ட்ரி

தமிழ் சினிமாவிற்கு மம்மூட்டியின் ரீ-என்ட்ரி

மம்மூட்டி கடைசியாக 2019-ல் வெளியான 'பேரன்பு' படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன் பிறகு 'நண்பகல் நேரத்து மயக்கம்' (2023) போன்ற படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டாலும், 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடிக்கும் நேரடி தமிழ் படம் இதுதான் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தனுஷின் 'வொண்டர்பார் ஃபிலிம்ஸ்' தயாரிக்கும் இப்படத்தின் ஓடிடி உரிமையை 'நெட்பிளிக்ஸ்' நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement